சீன அதிபர் வருகை !வெளியான போலிசெய்திகள் ! காவல்துறை விளக்கம்

சீன அதிபர் வருகையின்போது போலிசெய்திகள் அதிகம் வலம்வந்த நிலையில் சென்னை மாநகர காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.
தமிழகத்தில் உள்ள மாமல்லபுரத்தில் அக்டோபர் 11-ஆம் தேதி  சீன அதிபர் ஜின்பிங்கும்-இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர் .இதற்காக பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக போலிசெய்திகள் அதிகம் வலம்வந்தது.தற்போது இது குறித்து சென்னை மாநகர காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.அதில்,  சீன அதிபர் வருகையின்போது போக்குவரத்து நிறுத்தம் மற்றும் மாற்றம், வியாபாரம், கல்வி நிறுவனங்களை மூடுதல் குறித்து எவ்வித அறிவிப்பும் வெளியிடவில்லை.
பொதுமக்களுக்கு எவ்வித இடையூறும் இன்றி பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து ஏற்பாடுகள் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.