உலக நாடுகளுக்கு சீனா வழங்கிய மிக மோசமான பரிசு கொரோனா- டிரம்ப்!

உலக நாடுகளுக்கு சீனா வழங்கிய மிக மோசமான பரிசு கொரோனா- டிரம்ப்!

உலகம் முழுதுக்கும் கொரோனா வைரஸ் எனும் மிக மோசமான பெருந்தொற்றை சீனா பரிசாக வழங்கியுள்ளதாக அமெரிக்கா அதிபர் டிரம்ப் தெரிவித்தார்.

அமெரிக்காவில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து கொண்டே வருகிறது. இந்த வைரஸால் இதுவரை 1,768,461 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 103,330 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு சுகாதார துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

இதுகுறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை பதிவிட்டார். அதில் அவர், உறவினர்கள, நண்பர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு என் இதயபூர்வ இரங்கல்கள் தெரிவித்து கொள்கிறேன். இந்த அசாதாரண மக்கள் எதைத் தாங்கும் பிரதிநிதிகளாக நின்றனரோ அதற்கான என்னுடைய அன்புகளை தெரிவித்துக்கொள்கிறேன். கடவுள் உங்கள் பக்கம் இருப்பார் என கூறிய அவர், உலகம் முழுதுக்கும் கொரோனா வைரஸ் எனும் மிக மோசமான பெருந்தொற்றை சீனா பரிசாக வழங்கியுள்ளது எனவும், எதுவும் நல்லதாக இல்லை என அவர் கூறினார்.

]]>