கொரோனாவிற்கு எச்சரிக்கை கொடுத்தது சீனா அல்ல.. WHO அலுவலகம்.!

கொரோனாவிற்கு எச்சரிக்கை கொடுத்தது சீனா அல்ல.. WHO அலுவலகம்.!

கொரோனா வைரஸ் குறித்து சீனாவில் உள்ள தனது சொந்த அலுவலகத்தால் எச்சரிக்கப்பட்டது, அது சீனாவால் அல்ல என WHO  தெரிவித்துள்ளது. கொரோனா தடுக்க தேவையான தகவல்களை வழங்க அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தவறிவிட்டதாகவும், பெய்ஜிங்கில் தற்போது சிறப்பாக இருப்பதாகவும் ஐ.நா. சுகாதார அமைப்பு கூறியுள்ளது.

ஏப்ரல் 9-ஆம் அன்று, WHO தனது தகவல் தொடர்புகளின் அறிக்கையை  வெளியிட்டது. WHO-வின் தகவலை விமர்சித்ததற்கு தான் இப்போது உலகளவில் 521,000 க்கும் அதிகமான உயிர்களை கொரோனா வைரசால் இழந்துள்ளோம். ஹூபே மாகாணத்தில் வுஹான் நகராட்சி சுகாதார ஆணையம் டிசம்பர் 31-ம் தேதி அன்று நிமோனியா நோய்களைப் பதிவு செய்ததாக WHO கூறியது.

ஏப்ரல் 20ஆம் தேதி அன்று WHO இயக்குனர் டெட்ரோஸ் ஒரு செய்தியாளர் கூட்டத்தில், முதல் அறிக்கை சீனாவிலிருந்து வந்தது, அந்த அறிக்கை சீன அதிகாரிகளால் அனுப்பப்பட்டதா..? அல்லது வேறு அதிகாரிகளால்  மூலமா என குறிப்பிடவில்லை.

“வைரஸ் நிமோனியா” தொடர்பான தகவல்களை ஜனவரி 2 -ம் தேதி  இரண்டு முறை சீன அதிகாரிகளிடம் WHO கேட்டது.  வைரஸ் நிமோனியா பற்றிய தகவல்களை அவர்கள் ஜனவரி 3 அன்று வழங்கி உள்ளது.

author avatar
murugan
Join our channel google news Youtube