சீனாவின் பொருளாதாரச் சாலைத் திட்டம் : இந்தியா மறுப்பு..!

பல நாடுகளை இணைக்கும் சீனாவின் பொருளாதாரச் சாலைத் திட்டம் குறித்த தீர்மானத்தில் கையொப்பமிட இந்தியா மறுத்துவிட்டது.

சீனா, மங்கோலியா, ரஷ்யா மற்றும் ஐரோப்பிய நாடுகளை இணைக்கும் வகையில் நெடுஞ்சாலையையும், அதன் ஓரத்தில் தொழில் மண்டலங்களையும் அமைக்கச் சீனா திட்டமிட்டு வருகிறது.

Image result for China's economic road project: India denies it!கடந்த இரு நாட்களாகக் கிங்டாவோ நகரில் சாங்காய் ஒத்துழைப்பு மாநாடு நடைபெற்ற நிலையில், அதன் நிறைவில் சீனாவின் சாலைத் திட்டம் குறித்த தீர்மானத்துக்கு உறுப்புநாடுகளின் ஒப்புதல் கோரப்பட்டது.

17பக்கங்கள் கொண்ட இந்தத் தீர்மானத்தில் சீனா, கசகஸ்தான், கிர்கிஸ்தான், ரஷ்யா, தஜிக்கிஸ்தான், உஸ்பெகிஸ்தான், பாகிஸ்தான் ஆகிய 7நாடுகளும் கையொப்பமிட்டு இந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவதில் ஒத்துழைப்பதாக அறிவித்தன.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்புக் காஷ்மீர் வழியாக இந்த திட்டம் செயல்படுத்தப்படுவதாக கூறி  தீர்மானத்தில் கையெழுத்திட இந்தியா கையொப்பமிட மறுத்துவிட்டது.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment