அமெரிக்காவின் முயற்சியை சீனா ஏற்றுக் கொள்ளாது- சீனா டெய்லி ஊடகம்.!

அமெரிக்காவின் முயற்சியை சீனா ஏற்றுக் கொள்ளாது- சீனா டெய்லி ஊடகம்.!

சீனாவுக்குச் சொந்தமான பிரபல செயலியான டிக் டாக் சமீபத்தில் இந்தியாவில் தடை செய்யப்பட்டது. இந்நிலையில், அமெரிக்காவும் தடை விதிக்கவுள்ளதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. அமெரிக்கர்களின் தகவல்களை டிக் டாக் செயலி மூலம் பயன்படுத்தப்படலாம் என அமெரிக்காவின் இணையப் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதையடுத்து, டிக் டாக் செயலிக்கு அமெரிக்காவில் தடை விதிக்கப்படும் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தொடர்ந்து தெரிவித்து வருகிறார்.இதனால், டிக்டாக்கின் அமெரிக்கச் செயல்பாடுகளை வாங்க மைக்ரோசாப்ட், பைட்டான்ஸ் நிறுவனத்திடம் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது.

இதற்கிடையில், பேச்சு வார்த்தையை 45 நாள்களுக்குள் நடத்தி முடிக்கவேண்டும். அதாவது செப்டம்பர் 15-க்குள் இல்லையென்றால் அமெரிக்காவில்  டிக்டாக் தடை செய்யப்படும் என டிரம்ப் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், சீன அரசு நாளிதழான சீனா டெய்லியில், டிக்டாக்கை திருடும் அமெரிக்காவின் முயற்சியை சீனா ஏற்றுக் கொள்ளாது  எனவும் சீன நிறுவனங்கள் துன்புறுத்தப்படுவதாகவும், திட்டமிடப்பட்ட இந்த தாக்குதலுக்கு பதில் சொல்ல சீனாவிடம் ஏராளமான வழிகள் உள்ளதாக செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

author avatar
murugan
Join our channel google news Youtube