TIK TOK தடையால் 6 பில்லியன் டாலரை இழக்கும் சீனா நிறுவனம்.!

TIK TOK தடையால் 6 பில்லியன் டாலரை இழக்கும் சீனா நிறுவனம்.!

டிக்டோக் மற்றும் ஹெலோ பயன்பாடுகளின் தாய் நிறுவனமான பைட் டான்ஸ்க்கு 6 பில்லியன் டாலரை இழக்க கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது . 

சீனா மொபைல் செயலிகள் மூலம் தொடர்ந்து பயனர்களின் தகவல்கள் திருடப்படுவதாக குற்றச்சாற்றுகள் எழுந்துக்கொண்டே வந்தது. இந்நிலையில், இந்திய தகவல் தொழில்நுட்பச் சட்டம் 69-ஏ பிரிவின் கீழ், டிக் டாக், ஷேர் இட், ஹலோ, லைக், யூசி பிரவுசர், உள்ளிட்ட 59 செயலிகளுக்குத் தடை விதிப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

அதில் முதல்கட்டமாக டிக்டாக் செயலியை கூகுள் பிளேஸ்டோர் மற்றும் ஆப் ஸ்டோரில் இருந்து நீக்கியுள்ளார். இந்நிலையில், மொபைலில் டிக்டாக் செயலியை ஏற்கனவே மொபைலில் வைத்திருப்பவர்களுக்கு வீடியோ எதுவும் பிளே ஆகவில்லை. அதில் “NO network connection” என வந்ததை நாம் அனைவ்ரும் பார்த்தோம்.

இந்நிலையில் சீனாவின் அரசு ஊடகமான ‘தி குளோபல் டைம்ஸ்’ வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, டிக்டோக் மற்றும் ஹெலோ பயன்பாடுகளின் தாய் நிறுவனமான பைட் டான்ஸ்க்கு இந்திய அரசு தடை விதிக்க முடிவு செய்த பின்னர் 6 பில்லியன் டாலரை இழக்க நேரிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் டிக் டாக்கின் வருவாயின் முக்கிய ஆதாரமாக இந்தியா இல்லை, ஆனால் பயன்பாட்டிற்கான அதிக பதிவிறக்கங்களைக் இந்தியா சிறந்து விளங்குகிறது என குளோபல் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.
Join our channel google news Youtube