சீன பிரதமர் ஜின்பிங் - இந்திய பிரதமர் மோடி சந்திப்பின் மிக முக்கிய நிகழ்வுகள்!

சீன பிரதமர் ஜின்பிங் இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க உள்ளார். இந்த

By manikandan | Published: Oct 08, 2019 06:15 AM

சீன பிரதமர் ஜின்பிங் இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க உள்ளார். இந்த சந்திப்பு சென்னை மகாபலிபுரத்தில் நடைபெற உள்ளது.  அயல்நாட்டு தலைவர்கள் சந்திப்பு இதுவரை வடமாநிலங்களில் மட்டுமே நடைபெற்று வந்தது. ஆனால் இந்த முறை தென்மாநிலத்தில் சென்னையில் நடைபெற உள்ளது. வரும் வெள்ளியன்று பிற்பகல் சீன பிரதமர் ஜீன்பங்க்  சென்னை வருகிறார். அதன் பின்னர், மறுநாள் சனிக்கிழமை இந்திய பிரதமர் மோடி மற்றும் சீன பிரதமர் ஜீன்பங்க் ஆகியோர் சந்திப்பு நிகழ்கிறது. இந்த சந்திப்பு மகாபலிபுரம் சுற்றுலா தளத்தில் நிகழ உள்ளது. அங்கு சுமார் 7 மணிநேரம் இந்த சந்திப்பு நிகழ உள்ளது அந்த நேரம் மகாபலிபுர சிறப்ங்கங்களை இருநாட்டு பிரதமர்களும் சுற்றிப்பார்த்து பின்னர், அங்கு நடைபெறும் கலைநிகழ்ச்சிகளை பார்வையிடுகின்றனர். இந்த சந்திப்பின் போது அருணாச்சல பிரதேச எல்லையில்  இந்திய ராணுவம் பயிற்சி பெறுவது குறித்தும்,  காஷ்மீர் விவகாரத்தில் சீனாவின் நிலைப்பாடு குறித்தும் பலவற்றை பற்றி விவாதிக்க உள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது. அதனை அடுத்து, மறுநாள் ஞாயிற்று கிழமை சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் மீண்டும் இருநாட்டு பிரதமர்கள் சந்திப்பு நிகழ உள்ளது. இதனை அடுத்துதான்,  பிற்பகலில் சீன பிரதமர் பெய்ஜிங்கிற்கு செல்ல உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
Step2: Place in ads Display sections

unicc