சீனா நிலத்தின் ஒரு அங்குலத்தைக் கூட விட்டுக் கொடுக்காது!

சீன அதிபர் ஜின்பிங், சீனா தனது நிலத்தின் ஒரு அங்குலத்தைக் கூட பிற நாடுகளுக்கு விட்டுக் கொடுக்காது என்று  தெரிவித்துள்ளார்.

இந்திய – சீன எல்லைப் பகுதியில் உள்ள டோக்லம் பகுதிக்கு உரிமை கொண்டாடும் சீனா தென் சீனக் கடல் பகுதி முழுமைக்கும் சொந்தம் கொண்டாடி வருகிறது. இந்நிலையில் சீன அதிபராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜின்பிங் தொலைக்காட்சியில் மக்களுக்கு உரையாற்றினார்.

சீனா மேலாதிக்க எண்ணம் கொண்டு விரிவாக்கத்தில் ஈடுபடாது என்ற அவர், பிறரை பயமுறுத்துபவர்கள்தான் அனைவரையும் அதே கண்ணோட்டத்தோடு பார்ப்பார்கள் என்று கூறினார். நாட்டின் இறையாண்மையும், பிராந்தியத்தின் ஒருமையும் பாதுகாக்கப்படும் என்று தெரிவித்த அவர், பிரிவினைவாதிகள் மக்களின் கண்டனம் மற்றும் தண்டனைகளை சந்திப்பார்கள் என்றார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment