குளோனிங்_கால் தயார் செய்யப்பட்ட குரங்கை சீனா அறிமுகம் செய்தது…!!

நோய்கள் பற்றிய ஆராய்ச்சிக்கு பயன்படுத்த மரபணு முறையில் மாற்றம் செய்யப்பட்ட 5 குளோனிங் குரங்குகளை சீனா நாடு உருவாக்கியுள்ளது.

அல்சீமர் என்றழைக்கப்படும் மறதி, சிந்திக்கும் திறன் இழத்தல் போன்ற நோய்கள் பற்றிய ஆராய்ச்சியை நடத்துவதற்காக மரபணு முறையில் மாற்றம் செய்யப்பட்ட குரங்கிலிருந்து குளோனிங் முறையில் 5 குரங்குகளை சீனா நாடு உருவாக்கியுள்ளது. இதற்கு முன்பு ஆய்வு செய்யவேண்டும் என்பதற்க்காக எலி , பூச்சிகள் பயன்படுத்தப்பட்டன.

இந்தநிலையில் தற்போது மனித உடல் தன்மையுடன் ஒத்துள்ள குரங்கு வகைகள் மூலம் மருத்துவ ஆராய்ச்சிகளை மேற்கொள்ள ஆராய்ச்சியாளர்கள் முடிவு எடுத்திருந்தனர். இதனையடுத்து கடுமையான நோயினால் பாதிக்கப்பட்ட மரபணு மாற்றம் செய்யப்பட்ட குரங்கு ஒன்றை தேர்ந்தெடுத்து, அதிலிருந்து குளோனிங் முறையில் புதிதாக 5 குரங்கு குட்டிகளை உருவாக்கியுள்ளனர்.இது சீனா நாட்டின் அடுத்தகட்ட அறிவியல் வளர்ச்சியாக பார்க்கப்படுகின்றது.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment