இந்தியாவை அச்சுறுத்த சீனாவும், பாகிஸ்தானும் கைகோர்த்துள்ளதா.?

வடக்கு லடாக் பகுதிக்குள் 20,000 வீரர்களை பாகிஸ்தான் ராணுவம் நிறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்திய ராணுவத்தின் மீது அழுத்தம் கொடுப்பதற்காக வடக்கு லடாக் பகுதிக்குள் 20,000 வீரர்களை பாகிஸ்தான் ராணுவம் நிறுத்தியுள்ளதாகவும், இந்திய இராணுவத்தின் மீது அழுத்தம் கொடுப்பதற்காக பாகிஸ்தானிலிருந்து பயங்கரவாதிகளைப் பயன்படுத்துவதற்கான முயற்சியை சீனா மேற்கொண்டு வருகின்றது என தகவல் வெளியாகியுள்ளது.

ஜம்மு-காஷ்மீருக்குள் வன்முறையினை அதிகரிக்க சீனா இராணுவம், தரப்பில் பயங்கரவாத குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், லடாக்கில் ஏற்பட்ட சர்ச்சையைத் தீர்ப்பதற்கான முயற்சியாக இந்தியா மற்றும் சீனாவைச் சேர்ந்த உயர் தர இராணுவ அதிகாரிகள் நேற்று முன் தினம் ஒரு கூட்டத்தை நடத்தினர். அந்த கூட்டம் 12 மணி நேரமாக நீட்டித்தது.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.