வாட்ஸ் அப் மூலமாக குழந்தைகளின் ஆபாச வீடியோ ..! சென்னையில் சிபிஐ சோதனை..!

சமூக வலைதளமான வாட்ஸ்அப்பில் உள்ள குழுக்கள் மூலமாக சிறுவர் , சிறுமிகளின் ஆபாச

By murugan | Published: Oct 16, 2019 07:45 AM

சமூக வலைதளமான வாட்ஸ்அப்பில் உள்ள குழுக்கள் மூலமாக சிறுவர் , சிறுமிகளின் ஆபாச வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை அதிகம் பகிரப்பட்டு வருவதாக புகார்கள் எழுந்தன. இதை தொடர்ந்து சமூக வலைதளங்களில் குழந்தைகளின் ஆபாச வீடியோ பகிர்வு தொடர்பாக டெல்லி , மேற்கு வங்காளம் , ஜெய்ப்பூர் ஆகிய இடங்களில் சிபிஐ சோதனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இதைத் தொடர்ந்து சென்னையிலும் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னையில் வினோத் கண்ணன், கோஹிமா ஆகியோரின் வீடுகளில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர். இரண்டு தினங்களுக்கு முன்பாக வாட்ஸ் அப்பில் உள்ள குழுக்கள் மூலமாக சிறுவர் , சிறுமிகளின் ஆபாச வீடியோ மற்றும் புகைப்படங்களை பரப்பிய கேரளாவை சேர்ந்த 12 பேரை போலீசார் தனிப்படை அமைத்து கைது செய்தனர். அவர்களிடமிருந்து லேப்டாப் , பென்டிரைவ் போன்ற பொருட்களும் கைப்பற்றினர் என்பது குறிப்பிடத்தக்கது.
Step2: Place in ads Display sections

unicc