முதலமைச்சர் வெளிநாடு பயணம் !நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்த தலைவர்கள்

முதலீடுகளை ஈர்க்க வெளிநாடு பயணம் செல்ல உள்ள முதலமைச்சரை தமிழக அரசியல் தலைவர்கள்

By venu | Published: Aug 27, 2019 07:23 PM

முதலீடுகளை ஈர்க்க வெளிநாடு பயணம் செல்ல உள்ள முதலமைச்சரை தமிழக அரசியல் தலைவர்கள் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். நாளை தமிழக முதலமைச்சர் பழனிசாமி  தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் துபாய் ஆகிய மூன்று  நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார் .இந்த நிலையில் நாளை முதலமைச்சர் பழனிசாமி வெளி நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள நிலையில் தமிழக அரசியல் தலைவர்கள் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். இன்று சென்னை கிரீன்வேஸ் சாலை இல்லத்தில் முதலமைச்சர் பழனிசாமி இல்லத்தில் அமைச்சர் செங்கோட்டையன் , தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன்,தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் மற்றும் சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் ஆகியோர் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தார்கள்.
Step2: Place in ads Display sections

unicc