முதலீட்டாளர்கள் மாநாட்டின் தொடர்ச்சியே முதலமைச்சரின் வெளிநாட்டு பயணம் -தலைமை செயலர் சண்முகம் 

தமிழகத்தில் உள்ள தொழில் வாய்ப்புகள் குறித்து வெளிநாட்டு தொழிலதிபர்களிடம்

By venu | Published: Aug 21, 2019 10:10 AM

தமிழகத்தில் உள்ள தொழில் வாய்ப்புகள் குறித்து வெளிநாட்டு தொழிலதிபர்களிடம் முதலமைச்சர் எடுத்துரைப்பார் என்று தமிழக தலைமை செயலர் சண்முகம்  தெரிவித்துள்ளார். தமிழக தலைமை செயலர் சண்முகம்  பேட்டி அளித்தார்.அப்பொழுது அவர் பேசுகையில்,தொழில்துறையை மேம்படுத்தும் முதலீட்டாளர்கள் மாநாட்டின் தொடர்ச்சியே முதலமைச்சரின் வெளிநாட்டு பயணம் ஆகும். தமிழகத்தில் உள்ள தொழில் வாய்ப்புகள் குறித்து வெளிநாட்டு தொழிலதிபர்களிடம் முதலமைச்சர் எடுத்துரைப்பார் . இதன் மூலம் தமிழகத்தில் தொழில் முதலீடுகள் அதிகரிக்கும். குடிமராமத்து பணிகள் மூலம் ஓரிரு ஆண்டுகளில் நீர்நிலைகள் முற்றிலுமாக சீர்செய்யப்படும் .நீர்நிலைகளைப் பாதுகாக்கும் அரசின் நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் உதவியாக இருக்க வேண்டும் என்று  தலைமை செயலர் சண்முகம் தெரிவித்தார்.
Step2: Place in ads Display sections

unicc