ஆகஸ்டு 1-ம் தேதி முதல் அத்திவரதர் நின்ற கோலத்தில் பக்தர்களுக்கு காட்சி அளிப்பார்- முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு

காஞ்சிபுரம் அத்திவரதர் உற்சவத்திற்கான ஏற்பாடுகள் குறித்து முதலமைச்சர் பழனிசாமி நேரில் ஆய்வு செய்தார்.

இதன் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,  அத்திவரதர் தரிசனத்திற்காக இதுவரை 3.41 லட்சம் வாகனங்கள் காஞ்சிபுரம் வந்துள்ளன. நிழற் கூடம், மருத்துவ முகாம், காவல் உதவி மையங்கள் போன்ற வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.ஆகஸ்டு 1-ம் தேதி முதல் அத்திவரதர் நின்ற கோலத்தில் பக்தர்களுக்கு காட்சி அளிப்பார். பக்தர்கள் வசதிக்காக 1,250 சக்கர நாற்காலிகள் பயன்படுத்தப்படும் என்று தெரிவித்தார்.