இங்கிலாந்தில் காற்றாலை மற்றும் சூரிய சக்தி மின் உற்பத்தி கட்டமைப்புகளை பார்வையிட்ட முதலமைச்சர் பழனிசாமி

இங்கிலாந்தில் உள்ள காற்றாலை மற்றும் சூரிய சக்தி மின் உற்பத்தி கட்டமைப்புகளை 

By venu | Published: Aug 31, 2019 03:41 PM

இங்கிலாந்தில் உள்ள காற்றாலை மற்றும் சூரிய சக்தி மின் உற்பத்தி கட்டமைப்புகளை  முதலமைச்சர்   பழனிசாமி பார்வையிட்டார். முதலமைச்சர் பழனிச்சாமி வெளிநாட்டு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.அந்த வகையில் தற்போது  இங்கிலாந்து நாட்டுக்கு சென்றுள்ளார். இங்கிலாந்து நாட்டின் சஃபோல்க் நகரில் உள்ள ஐ.பி.ஸ்விட்ச்- ஸ்மார்ட் கிரிட் நிறுவனத்திற்கு தமிழக முதலமைச்சர்  பழனிசாமி சென்றார். அங்கு காற்றாலை மற்றும் சூரிய சக்தி மின் உற்பத்தி கட்டமைப்புகளை அவர் பார்வையிட்டார். காற்றாலை மின் உற்பத்தி மற்றும் சூரியசக்தி மூலம் பெறப்படும் மின்சாரத்தை மின் கட்டமைப்பில் எளிய முறையில் சேர்த்திடும் வழிமுறைகள் குறித்து விரிவாக விவாதித்தார் .அதாவது  தமிழ்நாட்டில் இந்த திட்டத்தை   செயல்படுத்தும் முறைகள் குறித்து அந்நிறுவனத்தின் உயர் அலுவலர்களிடம் விரிவாக விவாதித்தார்.
Step2: Place in ads Display sections

unicc