13 நாட்கள் பயணம் !நாளை சென்னை திரும்புகிறார் முதலமைச்சர் பழனிசாமி

தனது 13 நாட்கள் பயணத்தை முடித்துக்கொண்டு  முதலமைச்சர் பழனிசாமி நாளை  சென்னை

By venu | Published: Sep 09, 2019 10:46 AM

தனது 13 நாட்கள் பயணத்தை முடித்துக்கொண்டு  முதலமைச்சர் பழனிசாமி நாளை  சென்னை திரும்புகிறார். அரசு முறை பயணமாக முதலமைச்சர் பழனிசாமி  இங்கிலாந்து,அமெரிக்கா மற்றும் துபாய் ஆகிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அதன்படி முதலில் முதலமைச்சர் பழனிசாமி இங்கிலாந்து சென்றார்.முதலமைச்சர் முன்னிலையில் சுகாதாரத்துறை சார்பில் 3 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியது.இதனையடுத்து முதலமைச்சர் அமெரிக்காவிற்கு பயணம் மேற்கொண்டார்.அமெரிக்காவில் உள்ள நியூ யார்க்கில் முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற்றது.இந்த மாநாட்டில் முதலமைச்சர் முன்னிலையில் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியது. பின்னர் துபாய்க்கு முதலமைச்சர் பயணம் மேற்கொண்டார். இன்று அவர் அந்த நாட்டு தொழில் அதிபர்களுடன் ஆலோசனை நடத்துகிறார்.இதனைத்தொடர்ந்து தனது 13 நாட்கள் பயணத்தை முடித்துக்கொண்டு நாளை அதிகாலை 02.40 மணிக்கு  சென்னை வந்தடைகிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Step2: Place in ads Display sections

unicc