முடியும் என்று முடித்துக்காட்டியவர் முதலமைச்சர்  பழனிசாமி-  அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் 

முடியும் என்று முடித்துக்காட்டியவர் முதலமைச்சர்  பழனிசாமி என்று  அமைச்சர்

By Fahad | Published: Apr 02 2020 12:53 PM

முடியும் என்று முடித்துக்காட்டியவர் முதலமைச்சர்  பழனிசாமி என்று  அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்  தெரிவித்துள்ளார். முதலமைச்சர் பழனிசாமி தலைமையிலான அரசு மூன்று ஆண்டுகளைக் கடந்து விட்டது.இன்று நான்காவது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளார் முதலமைச்சர் பழனிசாமி .நான்காவது ஆண்டு தொடங்கியுள்ளதை முன்னிட்டு அதிமுக தொண்டர்கள் ராயப்பேட்டையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் முதலமைச்சர்  பழனிசாமிக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.இதைத் தொடர்ந்து, முதலமைச்சர் தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கி இந்நிகழ்வை கொண்டாடினார்.மேலும் முதலமைச்சர் பழனிசாமிக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில்,ஜெயலலிதா மறைவிற்கு பின் ஆட்சியை யாராலும் தொடர முடியாது என்று  அனைவரும் கூறிய நிலையில் , முடியும் என்று முடித்துக்காட்டியவர் முதலமைச்சர்  பழனிசாமி என்று தெரிவித்துள்ளார்.