ரூ.70.55 கோடி மதிப்பிலான 220 புதிய திட்டப் பணிகளுக்கு முதலமைச்சர் பழனிசாமி அடிக்கல்.!

ரூ.70.55 கோடி மதிப்பிலான 220 புதிய திட்டப் பணிகளுக்கு முதலமைச்சர் பழனிசாமி அடிக்கல்.!

ராமநாதபுரத்தில் ரூ.70.55 கோடி மதிப்பிலான 220 புதிய திட்டப் பணிகளுக்கு முதல்வர் அடிக்கல் நாட்டினார்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் ஆட்சியர் அலுவலகத்தில் கொரோனா தடுப்பு பணி மற்றும் வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு மேற்கொண்டார். அப்போது, ரூ.70.55 கோடி மதிப்பிலான 220 புதிய திட்டப் பணிகளுக்கு முதல்வர் அடிக்கல் நாட்டினார். பல்வேறு துறைகள் சார்பாக ரூ.24 கோடி மதிப்பீட்டில் 844 முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்தார்.

இதனையடுத்து 15,000க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு ரூ.72 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதையடுத்து பேசிய முதல்வர், ரூ.48 கோடி மதிப்பீட்டில் 308 குடிமராமத்து பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. குடிமராமத்து பணிகளால் பருவகால மழைநீர் வீணாகாமல் சேமிக்கப்படுகிறது என்று கூறியுள்ளார். குடிமராமத்து திட்டம் மூலம் விவசாயிகள் நல்ல பலன் கிடைத்துள்ளது.

நதிகள், ஓடைகளின் குறுக்கே தடுப்பணை கட்ட அரசு நடவடிக்கை எடுக்கும். ஆர்.எஸ். மங்கலம் கண்மாய் நவீனப்படுத்தப்பட்டுள்ளது. மீன்பிடி தொழிலும் ராமநாதபுரத்தில் மேற்கொள்ளப்படுகிறது. ரூ.345 கோடியில் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைப் பணி குறித்து இராமநாதபுரத்தில் முதலமைச்சர் பழனிசாமி பெருமிதம் கொண்டார். இந்திய - சீன எல்லையில் ஏற்பட்ட மோதலில் உயிரிழந்த ராணுவ வீரர் பழனிசாமி மனைவி வானதிதேவிக்கு அரசு வேலைக்கான ஆணையை இவ்விழாவில் வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Posts

#IPL2020: 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஹைதராபாத்..!
#IPL2020: சிறப்பாக பந்து வீசிய ஹோல்டர்..155 ரன் இலக்கு வைத்த ராஜஸ்தான்..!
கிசான் சூர்யோதயா, உள்ளிட்ட மூன்று திட்டங்களை திறந்து வைக்கும் பிரதமர் மோடி!
வாணியாறு அணையின் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை.!
#BREAKING: ஆளுநர் மாளிகை முன் ஆர்ப்பாட்டம் - ஸ்டாலின் அறிவிப்பு..!
"பராசக்தி ஹீரோ டா.. நாங்க திரும்பி வருவோம்" தமிழில் பேசி அசத்தும் தாஹிர்!
முதலைக்கடியில் இருந்து அதிர்ஷ்டவசமாக தப்பிக்கும் நபர்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ!
#BREAKING: மசோதா மீது முடிவெடுக்க அவகாசம் தேவை..தமிழக ஆளுநர்.!
பாலியல் பலாத்காரம் செய்ததாக 16 வயது சிறுமி புகார்..சிறுவனை கைது செய்த போலீசார்.!
சீனாவுடனான பதட்டங்களுக்கு மத்தியில் தைவானுக்கு 1.8 பில்லியன் டாலர் ஆயுத விற்பனை.. டிரம்ப் நிர்வாகம் ..!