புதிய மருத்துவக் கல்லூரிக்கு  அடிக்கல் நாட்டினார்  முதலமைச்சர் பழனிசாமி

நீலகிரி மாவட்டத்தில்  புதிய மருத்துவக் கல்லூரிக்கு  அடிக்கல் நாட்டினார்  முதலமைச்சர் பழனிசாமி. 

மத்திய அரசு தமிழகத்தில் 11 புதிய மருத்துக கல்லூரிகள் தொடங்க அனுமதி அளித்ததுள்ளது.இதனிடையே  10 மாவட்டங்களில் கல்லூரிகள் கட்டுவதற்கான அடிக்கல்நாட்டு பணிகளை முதலமைச்சர் பழனிசாமி தொடக்கி வைத்தார் .இந்நிலையில் நீலகிரி மாவட்டத்தில்  புதிய மருத்துவக் கல்லூரி முதலமைச்சர்  பழனிச்சாமி இன்று  அடிக்கல் நாட்டியுள்ளார். 

 நீலகிரியில் அமையவுள்ள 11வது புதிய மருத்துவக் கல்லூரி ஆகும். ரூ. 447 கோடி  மதிப்பீட்டில் புதிய மருத்துவக்கல்லூரி மருத்துவமனை அமைக்கப்படவுள்ளது. 40 ஏக்கர் பரப்பில் அரசு மருத்துவக்கல்லூரி அமைகிறது.இதன் மூலம் தமிழக மாணவர்களுக்கு கூடுதலாக 150 மருத்துவ இடங்கள் கிடைக்கும் என கூறப்படுகிறது.