பேரவையில் புதிய அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் பழனிசாமி

நேற்று தமிழக சட்டப்பேரவை நடைபெற்றது. பேரவையில் விதி 110-ன் கீழ் முதலமைச்சர் பழனிசாமி

By Fahad | Published: Apr 09 2020 04:25 AM

நேற்று தமிழக சட்டப்பேரவை நடைபெற்றது. பேரவையில் விதி 110-ன் கீழ் முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்புகளை வெளியிட்டார்.அவர் வெளியிட்ட அறிவிப்பில், தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலை. வளாகத்தில் ரூ 3.5 கோடியில், 12 ஆசிரியர் குடியிருப்புகள் கட்டப்படும்.12,524 ஊராட்சிகள் மற்றும் 528 பேரூராட்சிகளில் ரூ 64.35 கோடியில் அம்மா இளைஞர் விளையாட்டு திட்டம் செயல்படுத்தப்படும் .நாகை ஆற்காட்டுத்துறையில் ரூ 150 கோடியில் மீன்பிடி துறைமுகம் அமைக்கப்படும். தூத்துக்குடி மாவட்டம் பெரியதாழையில் கடலரிப்பை தடுக்க ரூ 30 கோடியில் தடுப்புச்சுவர் அமைக்கப்படும்.மாநில தகவல் ஆணையத்திற்கு ரூ 27.79 கோடியில் சொந்த கட்டடம் கட்டப்படும் என்று அறிவித்தார்.