கனமழையால் நீலகிரி மற்றும் கோவையில் பாதிப்பு !முதலமைச்சர்  பழனிசாமி தலைமையில் ஆலோசனை

நீலகிரி மற்றும் கோவையில் ஏற்பட்ட பாதிப்புகள் காரணமாக முதலமைச்சர்  பழனிசாமி

By venu | Published: Aug 14, 2019 11:36 AM

நீலகிரி மற்றும் கோவையில் ஏற்பட்ட பாதிப்புகள் காரணமாக முதலமைச்சர்  பழனிசாமி தலைமையில் ஆலோசனை நடைபெற்று வருகிறது. தென்மேற்கு பருவ மழை தற்போது தீவிரமடைந்துள்ளது.இதன்காரணமாக கர்நாடகா மற்றும் கேரளாவில் கனமழை பெய்து  வருகிறது.தமிழகத்தை பொறுத்தவரை கோவை,நீலகிரி மாவட்டத்தில் கனமழை பெய்தது. குறிப்பாக நீலகிரியில் கனமழையால் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி வருகிறது.பல இடங்களில் மரங்கள் சாய்ந்துள்ளதால் அவற்றை அகற்றும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.மேலும் பல்லாயிரக்கணக்கான  மக்கள் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.நேற்று துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் நீலகிரியில் ஆய்வு செய்தார். இந்த நிலையில் நீலகிரி மற்றும் கோவையில் ஏற்பட்ட பாதிப்புகள் காரணமாக முதலமைச்சர்  பழனிசாமி தலைமையில் ஆலோசனை நடைபெற்று வருகிறது.இந்த ஆலோசனை கூட்டத்தில் துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம்,அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர்.  
Step2: Place in ads Display sections

unicc