ஆளுநருக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் முதலமைச்சர் குமாரசாமி மனு தாக்கல்

நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த வேண்டும் என்ற ஆளுநரின் வலியுறுத்தலுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் முதலமைச்சர் குமாரசாமி மனு தாக்கல் செய்துள்ளார்.

மதியம் 1.30 மணிக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த வேண்டும் என முதலமைச்சர் குமாரசாமிக்கு கர்நாடக ஆளுநர் கடிதம் எழுதியிருந்தார்.

இந்த நிலையில் ஆளுநரின் வலியுறுத்தலுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் முதலமைச்சர் குமாரசாமி மனு தாக்கல் செய்துள்ளார்.இன்று மதியம் 1.30 மணிக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற ஆளுநரின் அறிவுறுத்தலுக்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளார். அவரது மனுவில்,சட்டமன்ற நடவடிக்கைகளில் ஆளுநர் தலையிட முடியாது, சபாநாயகருக்கு தான் அதிகாரம் உள்ளது.