பொங்கல் பண்டிகையையொட்டி முதலமைச்சர் வாழ்த்து

  • பொங்கல் பண்டிகை இன்று  கொண்டாடப்படுகிறது.
  • இதனையொட்டி முதலமைச்சர் பழனிசாமி வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். 

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை இன்று  கொண்டாடப்படுகிறது.இதற்காக மக்கள் அனைவரும் தமிழர் திருநாளான பொங்கலை கொண்டாட தயாராகி வருகின்றனர்.இதனையொட்டி தலைவர்கள் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.அந்த வகையில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அவரது வாழ்த்து செய்தியில் ,தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் எனது அன்பிற்குரிய தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது உளம்கனிந்த பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.பல்வேறு திட்டங்களை அம்மாவின் வழியில் செயல்படும் தமிழ்நாடு அரசு வேளாண் பெருமக்களின் நல்வாழ்விற்காக சீரிய முறையில் செயல்படுத்தி வருகிறது.பொங்கல் பண்டிகையை தமிழ்நாட்டு மக்கள் சிறப்பான முறையில் கொண்டாடிட தமிழ்நாடு அரசு, அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு சிறப்பு பொங்கல் பரிசு தொகுப்புடன், 1000 ரூபாய் ரொக்கமும் வழங்கி சிறப்பித்துள்ளது.இந்த இனிய நாளில் தமிழ்நாடு மக்கள் அனைவரும் எல்லா வளமும்,நலமும் பெற்று சீரோடும் ,சிறப்போடும் வாழ்ந்திட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.