ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு : சிதம்பரம் தாக்கல் செய்த மனு இன்று விசாரணை

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் சிதம்பரம் தரப்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் தாக்கல்

By Fahad | Published: Apr 06 2020 11:23 PM

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் சிதம்பரம் தரப்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் வழங்கக்கோரிய மனு  மீதான விசாரணை இன்று நடைபெறுகிறது. ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் சிதம்பரத்தை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர்.இதனையடுத்து சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை கடந்த 5-ஆம் தேதி திகார் சிறையில் அடைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.அதாவது வருகின்ற 19-ஆம் தேதி வரை சிறையில் அடைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.தற்போது அவர் சிறையில் உள்ள நிலையில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் சிதம்பரம் தரப்பில் முன் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சிதம்பரம் தரப்பில் காவலை ரத்து செய்யக்கோரியும், ஜாமீன் வழங்கக்கோரியும் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.அந்த மனுவை இன்று விசாரிக்க உள்ளது டெல்லி உயர்நீதிமன்றம்.