சிதம்பரத்தை திகார் சிறைக்கு அனுப்ப உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை

சிதம்பரத்தை திகார் சிறைக்கு அனுப்ப சிபிஐக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

சிபிஐ காவலை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில்  தொடர்ந்த வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில்  விசாரணைக்கு வந்தது.அதில் சிதம்பரம் தரப்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபில் வாதாடினார்.

அப்பொழுது அவர் வாதிடுகையில், ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில்  சிதம்பரத்தை வீட்டுக்காவலில் வேண்டுமானாலும் வைத்து விசாரித்துக் கொள்ளுங்கள். சிபிஐ வழக்கில் நீதிமன்ற காவலுக்கு உத்தரவிடாதபடி தடை விதிக்க வேண்டும் .ஆனால் திகார் சிறைக்கு சிதம்பரத்தை அனுப்பிவிடாதீர்கள் என்று வாதிட்டார்.மேலும் வீட்டுக்காவலில் வைப்பது குறித்து சிபிஐ நீதிமன்றத்தை அணுக பரிசீலித்தது உச்சநீதிமன்றம்.

இதனையடுத்து திகார் சிறைக்கு  சிதம்பரத்தை அனுப்ப சிபிஐ க்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.மேலும் சிபிஐ நீதிமன்றம் ஜாமீன் கொடுக்காவிட்டால், சிதம்பரத்தை  வியாழக்கிழமை வரை  சிபிஐ காவலில் விசாரிக்க உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.