நேஷனல் ஹெரால்ட் வழக்கில் சிதம்பரம் உங்கள் குடும்பத்துடன் இருப்பார்-பிரியங்கா காந்திக்கு ஹெச்.ராஜா பதில்

நேஷனல் ஹெரால்ட் வழக்கில் சிதம்பரம் உங்கள் குடும்பத்துடன் இருப்பார் என்று பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.

ஐஎன்எக்ஸ் வழக்கு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.நேற்று டெல்லி உயர்நீதிமன்றம் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் சிதம்பரம் தரப்பில் முன் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்தது.இதனை தொடர்ந்து சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை சிதம்பரம் வீட்டிற்கு நோட்டீஸ் அளிக்க சென்றனர்.ஆனால் சிதம்பரம் வீட்டில் இல்லை.பின் நோட்டீஸ் அவரது வீட்டில் ஒட்டப்பட்டது.

இதனை தொடர்ந்து  சிதம்பரம் குறித்து  காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றை பதிவிட்டார் .அவரது பதிவில், நாட்டிற்காக விசுவாசமாக பணியாற்றியவர்  சிதம்பரம். உள்துறை அமைச்சராகவும், நிதியமைச்சராகவும் பணியாற்றியுள்ளார்.

அரசின் தோல்விகளை வெளிப்படுத்தியதால் சிதம்பரம் வேட்டையாடப்படுகிறார்.பாஜக அரசின் தவறுகளை சுட்டிக்காட்டியவர் சிதம்பரம்.சிதம்பரத்துடன் இணைந்து நாங்கள் நிற்போம். எந்த பின்விளைவுகள் வந்தாலும் அதைப்பற்றி கவலைப்படாமல் உண்மைகாக போராடுவோம் என்று  பதிவிட்டார்.பிரியங்காவின் இந்த பதிவிற்கு பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் பதில் கருத்தை தெரிவித்துள்ளார்.

அவரது பதிவில்,  சிதம்பரம் மற்றும் அவரது குடும்பத்தினர் ஊழலின் தலைவர்கள்.அவருக்கு நீண்ட கயிறு வழங்கப்பட்டுள்ளது.அவரை இனி யாரும் காப்பாற்ற முடியாது.நீங்கள் அவருடன் இருங்கள்.நேஷனல் ஹெரால்ட் வழக்கில் அவர் உங்கள் குடும்பத்துடன் இருப்பார் என்று பதிவிட்டுள்ளார்.