தீபம் ஏற்றினால் மட்டும் கொரோனாவை ஒழிக்க முடியாது முறையான பரிசோதனை அவசியம் என முன்னால் மத்திய அமைச்சர் கருத்து....

உலகம் முழுவதும் பரவி பல உயிர்களை காவு வாங்கிய கொடிய கொரோனா வைரஸ் தொற்று  இந்தியாவிலும்

By kaliraj | Published: Apr 06, 2020 10:48 AM

உலகம் முழுவதும் பரவி பல உயிர்களை காவு வாங்கிய கொடிய கொரோனா வைரஸ் தொற்று  இந்தியாவிலும் பரவிய காரணத்தால் இந்திய்யா முழுவதும் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை பணிகள் நடைபெறத்தொடங்கியது. இதன் ஒரு பகுதியாக இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. மேலும் இந்திய மக்கள் கொரோனாவை எதிர்த்து போரிடும் இந்த சூழலில் இந்திய பிரதமர் பொதுமக்களின் ஒற்றுமையை மேம்படுத்த ஏற்கனவே கொரோனாவை எதிர்த்து போரிட உதவும் பணியாளர்களுக்க நன்றி தெரிவிக்க அனைவரையும் கைதட்டும்படி நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். அதன் படி இந்தியா முழுவதும் இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. பொதுமக்கள் தங்கள் வீட்டு வாசல்களில் நின்றும், வீட்டின் மாடியில் நின்றும் கைகளை தட்டி அவர்களுக்கு நன்றி தெரிவித்தனர். இந்நிலையில் மீண்டும் இந்திய பிரதமர் இந்திய மக்களின் ஒற்றுமைக்காக  ஒற்றுமைக்கான ஒளி என நேற்று இரவு விளக்குகளை அணைத்து விட்டு தீப விளக்குகளை ஏற்ற வேண்டுகோள் விடுத்தார். இதனையும் மக்கள் ஏற்று அனைவரது வீடுகளிலும் தீபங்களை ஏற்றியும், ஒருசில இடங்களில் பட்டாசு வெடித்தும் ஒளியை பிரகாசிக்க செய்தனர். இந்நிலையில்,ஒளியால் மட்டுமே கொரோனா தொற்றை ஒழிக்க முடியாது என்று விஞ்ஞானம் கூறுவதாக முன்னாள் மத்திய நிதியமைச்சரும் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவருமான  ப.சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், மிக அதிகமாக, பரவலாக மக்களுக்கு கொரோனா சோதனை செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளார். ஊரடங்கு மற்றும் கூடுதல் பரிசோதனை தான் நல்ல பயன்களை தரும் என்றும் அவர் கூறியுள்ளார். இதையே ஜப்பான், தென் கொரியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகள் நமக்கு அறிவுறுத்துவதாக அந்த பதிவில் முன்னால் அமைச்சர் ப.சிதம்பரம் குறிப்பிட்டுள்ளார்.

Step2: Place in ads Display sections

unicc