திகார் சிறையில் உள்ள சிதம்பரம் இன்று சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜர்

திகார் சிறையில் உள்ள சிதம்பரம் இன்று டெல்லியில் உள்ள சிபிஐ நீதிமன்றத்தில்

By venu | Published: Sep 19, 2019 10:30 AM

திகார் சிறையில் உள்ள சிதம்பரம் இன்று டெல்லியில் உள்ள சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகிறார். ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தாக்கல் செய்த முன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது டெல்லி உயர்நீதிமன்றம்.இதனைத்தொடர்ந்து கடந்த மாதம் 21-ஆம் தேதி சிதம்பரத்தை சிபிஐ கைது செய்தனர். மேலும் காவல் எடுத்து விசாரணை செய்து வந்தது.பின்னர் சிபிஐ நீதிமன்றத்தில் சிதம்பரம் கடந்த 5-ஆம் தேதி ஆஜர்படுத்தப்பட்டார்.ஆஜரான அவருக்கு சிபிஐ நீதிமன்றம் செப்டம்பர் 19 -ஆம் தேதி வரை (அதாவது இன்று வரை )திகார் சிறையில் அடைக்க உத்தரவு பிறப்பித்தது.மேலும் தனது 74 -வது பிறந்த நாளில்  கூட திகார் சிறையில் தான் இருந்தார். இந்த நிலையில் இன்றுடன் சிதம்பரத்தின் காவல் முடிவடைய உள்ள நிலையில் டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகிறார்.இன்று ஆஜர்படுத்தப்பட்ட பின் அவர் மீண்டும் திகார் சிறையில் அடைக்கப்படுவாரா?இல்லையா ? என்பது தெரிந்துவிடும்.  
Step2: Place in ads Display sections

unicc