106 நாட்களுக்குப் பிறகு சிறையில் இருந்து வெளியே வந்தார் சிதம்பரம்..!

ஐஎன்எக்ஸ் மீடியா தொடர்பான வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் சிதம்பரம்

By murugan | Published: Dec 04, 2019 08:31 PM

ஐஎன்எக்ஸ் மீடியா தொடர்பான வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் சிதம்பரம் திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.இதனை தொடர்ந்து உச்சநீதிமன்றத்தில் சிதம்பரம் தரப்பில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. இன்று இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவு பிறப்பித்தது. இந்நிலையில் காங்கிரஸ் மூத்த தலைவர் ப. சிதம்பரம் டெல்லி திகார் சிறையில் இருந்து வெளியே வந்தார். 106 நாள்கள் சிறைவாசத்திற்கு பிறகு இன்று மாலை திகார் சிறையில் இருந்து முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் வெளியே வந்தார். சிறையில் இருந்து வெளியே வந்த சிதம்பரத்திற்கு காங்கிரஸ் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.ஏற்கனவே சிபிஐ தொடர்ந்த வழக்கில் சிதம்பரத்திற்கு ஜாமீன் வழக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.  
Step2: Place in ads Display sections

unicc