சிதம்பரம் வழக்கில் இன்று மதியம் உத்தரவு

அமலாக்கத்துறையிடம் சிதம்பரம் சரணடைவது தொடர்பான மனு மீதான விசாரணை இன்று  மதியம்

By Fahad | Published: Apr 01 2020 02:00 PM

அமலாக்கத்துறையிடம் சிதம்பரம் சரணடைவது தொடர்பான மனு மீதான விசாரணை இன்று  மதியம் உத்தரவு பிறப்பிக்கிறது  சிபிஐ நீதிமன்றம். ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் சிதம்பரம் சிபிஐ வழக்கில் திகார் சிறையில் உள்ளார்.ஆனால் அமலாக்கத்துறைக்கு தொடர்பான வழக்கின் விசாரணையும் நடைபெற்று வருகிறது.இதனால் இந்த வழக்கில் சிதம்பரம் தரப்பில் முன் ஜாமின் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை மறுத்த நிலையில் , அமலாக்கத்துறை வழக்கில் சரணடைய விருப்பம் தெரிவித்து தாக்கல் செய்த சிதம்பரத்தின் மனு மீதான விசாரணை  நடைபெற்றது.இதனை நீதிபதி அஜய் குமார் என்பவர் விசாரித்தார்.இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி அஜய் குமார்,ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் சரணடைய விருப்பம் தெரிவித்து சிதம்பரம் தாக்கல் செய்த மனு மீது இன்று  உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று அறிவித்தார்.

More News From CBI Judge Ajay Kumar Kuhar