முதல் விக்கெட்டை இழந்தது சென்னை! 6 ஓவர்களில் 53 ரன்கள் அடித்தது சென்னை அணி

ஐபிஎல் இறுதிப்போட்டி இன்று நடைபெற்று வருகிறது.இதில் மும்பை மற்றும் சென்னை

By Fahad | Published: Apr 04 2020 11:53 PM

ஐபிஎல் இறுதிப்போட்டி இன்று நடைபெற்று வருகிறது.இதில் மும்பை மற்றும் சென்னை மோதி வருகிறது.இதில் டாஸ் வென்ற மும்பை பேட்டிங்கை தேர்வு செய்தது. முதலில் விளையாடிய மும்பை அணி 20  ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டை இழந்து 149 ரன்கள் அடித்தது.இதனை அடுத்து 150 ரன்கள் இலக்குடன் சென்னை அணி களமிறங்கியது. இதன் பின்னர் சென்னை அணி தனது பேட்டிங்கை தொடங்கியது.தொடக்க வீரர்களாக வாட்சன் மற்றும் டு பிளேஸிஸ் களமிறங்கினார்கள்.க்ருனால் பாண்டியா வீசிய 4-வது ஓவரில் டு பிளேஸிஸ் 2 பவுண்டரி,1 சிக்ஸ் அடித்து பின்னர் 26 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தார். சென்னை அணி 6 ஓவர்கள் முடிவில் 1 விக்கெட்டை  53 ரன்கள் அடித்துள்ளது.வாட்சன் 23* ரன்கள் ,ரெய்னா 3* ரன்களுடன் களத்தில் உள்ளனர்.மும்பை அணியின் பந்துவீச்சில் க்ருனால் பாண்டியா 1 விக்கெட் கைப்பற்றினார்.