சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அறிவிப்பு..!மகிழ்ச்சியில் ரசிகர்கள் ..!

அடுத்தாண்டு நடைபெற உள்ள ஐபிஎல் தொடருக்கான ஏலம் வருகின்ற 19-ம் தேதி நடைபெறுகிறது.

By manikandan | Published: Nov 21, 2019 10:49 AM

அடுத்தாண்டு நடைபெற உள்ள ஐபிஎல் தொடருக்கான ஏலம் வருகின்ற 19-ம் தேதி நடைபெறுகிறது. ஐபிஎல் தொடருக்கான ஏலம் ஆண்டு தோறும் பெங்களூருவில் நடைபெற்று வந்தது. ஆனால் கடந்த ஆண்டு பெங்களூரில் நடைபெறாமல் ஜெய்ப்பூரில் நடைபெற்றது. அடுத்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடருக்கான ஏலம் டிசம்பர் 19ம் தேதி கொல்கத்தாவில்  நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஏலத்தில் 85 கோடி வரை செலவு செய்யலாம் என ஐபிஎல் நிர்வாக குழு தெரிவித்துள்ளது. ஏலத்திற்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இடம் 3.2 கோடியே கையிருப்பில் வைத்துள்ளது. இந்நிலையில் ஏலத்திற்கு இன்னும் சில நாள்களே உள்ள நிலையில் சென்னை அணியில் தக்க வைத்துள்ள வீரர்களின் பெயரை குறிப்பிடாமல் அவர்களின் ஜெர்சி நம்பரை மட்டும்  தனது ட்விட்டர் பக்கத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் வெளியிட்டு உள்ளது. அதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனியின் ஜெர்சி நம்பரான 7 இடம்பெற்று உள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.உலகக்கோப்பைக்கு பிறகு ஒரு போட்டியில் கூட கலந்து கொள்ளாத தோனி ஐபிஎல் தொடரில் விளையாடுவாரா..? என்ற எண்ணம் ரசிகர்களிடம் இருந்த நிலையில் இந்த அறிவிப்பு ரசிகர்களுக்கு மகிழ்ச்சியாக உள்ளது.
Step2: Place in ads Display sections

unicc