ஐஐடி மாணவி தற்கொலை வழக்கை மத்திய குற்றப்பிரிவு விசாரிக்கும்! – சென்னை காவல் ஆணையர் தகவல்!

கேரளா மாநிலம் கொல்லத்தை சேர்ந்த பாத்திமா லத்தீப் என்கிற மாணவி சென்னை ஐஐடியில் முதுகலை படிப்பில் முதலாமாண்டு பயின்று வந்தார். இவர் கடந்த சனிக்கிழமை அன்று தனது விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
இவர் இன்டெர்னல் தேர்வில் குறைவான மதிப்பெண் வாங்கியதால் தற்கொலை செய்துகொண்டார் என கூறப்பட்டது. அதன் பின்னர் அவரது செல்போனை ஆராய்ந்தபோது, அதில், பாத்திமா, தனது தற்கொலைக்கு சுதர்சன் பத்மநாபன் உள்ளிட்ட சில பேராசிரியர்கள் காரணம் என அவர் ஆங்கிலத்தில் பதிந்து வைத்திருப்பதாக தகவல் வெளியானது. இதனை தொடர்ந்து தற்போது போலீஸ் விசாரணை நடைபெற்று வருகிறது.
மாணவி செல்போன் பதிவு மூலம், பேராசிரியர் சுதர்சன் பத்மநாபன் உட்பட மேலும் நான்கு பேராசிரியர்கள் மீதும் விசாரணை நடைபெற்று வருகிறது. இது குறித்து பேசிய மாவட்ட காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் பத்திரிக்கையாளர்களிடம், ‘ இந்த வழக்கனது மத்திய குற்றப்பிரிவு சிறப்பு குழுவினர் விசாரணை நடத்த உள்ளனர். எனவும், இந்த சிறப்பு விசாரணை குழுவிற்கு தலைவராக கூடுதல் துணை ஆணையர் மெட்லின் இருப்பார் எனவும், சிபிஐ-இல் இருந்த சிறந்த அதிகாரிகள் இந்த குழுவில் இருக்கிறார்கள் எனவும், விசாரணை உண்மையாக நடைபெறும் எனவும் குறிப்பிட்டார்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.