மதுக்கடைகளை மூட அரசு ஏன் நடவடிக்கை எடுக்கக்கூடாது.! - உயர்நீதிமன்றம் கேள்வி.!

மதுக்கடைகளை மூட அரசு ஏன் நடவடிக்கை எடுக்கக்கூடாது.! - உயர்நீதிமன்றம் கேள்வி.!

சமூக இடைவெளியை கடைபிடிக்க முடியாது என்பதால் மாணவர்களுக்கு முட்டை வழங்க முடியவில்லை. அப்படியானால், சமூக இடைவெளியை பின்பற்றப்படாத மதுக்கடைகளை மூட அரசு ஏன் நடவடிக்கை எடுக்கக்கூடாது. - சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி.

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக தமிழகத்தில் அனைத்து பள்ளிகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டு உள்ளது. இந்நிலையில் தமிழக மகிளா காங்கிரஸ் சார்பில் வழக்கறிஞர் சுதா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அதாவது, மாணவர்களுக்கு சத்துணவு மற்றும் முட்டை வழங்க வலியுறுத்தி வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கில் அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், தனிமனித இடைவெளியை மாணவர்கள் பின்பற்றுவதில் பிரச்சினை ஏற்படும் என்பதால் பள்ளிகளில் மாணவர்களுக்கு முட்டை வழங்க தற்போது முடியாது. என தெரிவித்தார்.

இதனை கேட்ட சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள், " சமூக இடைவெளியை கடைபிடிக்க முடியாது என்பதால் மாணவர்களுக்கு முட்டை வழங்க முடியவில்லை. அப்படியானால், சமூக இடைவெளியை பின்பற்றப்படாத மதுக்கடைகளை மூட அரசு ஏன் நடவடிக்கை எடுக்கக்கூடாது." என கேள்வி எழுப்பினர். மேலும், " பள்ளிகளில் வாரத்துக்கு ஒருமுறை அல்லது இருமுறையேனும் முட்டை வழங்க வேண்டும் அதனை எப்படி வழங்குவது என்பது குறித்து அரசு முடிவெடுக்க வேண்டும்." எனவும் உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கு விசாரணையை நாளை ஒத்திவைத்தார்.

Latest Posts

வெற்றி மேல் வெற்றி வரட்டும் முதல்வர் வாழ்த்து
இதுவரை இந்தியாவில் கொரோனா பாதிப்பு எவ்வளவு? குணமாகியவர்கள் எவ்வளவு?
மதுரை பட்டாசு ஆலை வெடி விபத்து! பட்டாசு ஆலை மேலாளர் உட்பட 3 பேர் மீது வழக்கு பதிவு!
இல்லாத ஊசி...வசனம் சினிமாவுக்கு நல்லா இருக்கும் அரசியலுக்கு??
முதல்வர் அக்.,28-ல் முக்கிய ஆலோசனை..
துருக்கி பொருட்களை புறக்கணிப்பு! சவூதி அரசு அதிரடி முடிவு!
7.5% உள் ஒதுக்கீடு மசோதாவிற்கு ஆளுநர் விரைவில் ஒப்புதல் தருவார் -அமைச்சர் ஜெயக்குமார் 
அமெரிக்க கடற்படை விமானம் விபத்து....!
பனையூரில் விஜய் நிர்வாகிகளுடன் திடீர் ஆலோசனை..???
சமூக அநீதி தேர்வுகளில் தொடர்கிறது - திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம்!