சனிக்கிழமையும் வேலை தான் சென்னை உயர்நீதிமன்றம் அறிவிப்பு.!

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள அனைத்து நீதிமன்றங்களுக்கும் வாரத்தில்

By gowtham | Published: Jun 03, 2020 03:23 PM

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள அனைத்து நீதிமன்றங்களுக்கும் வாரத்தில் ஒருநாள் நாட்கள் ஆறு நாட்கள் வேலை என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.

கொரோனா காரணமாக குறைந்த அளவில் பணியாளர்களை கொண்டு சென்னை உயர்நீதிமன்ற தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள அனைத்து நீதிமன்றம் இயங்கி வருகின்றது. இதனால் பணிச்சுமை அதிகரிக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால் திங்கள் முதல் வெள்ளி வரை என்று இருந்த பணி தற்போது  ஆறு நாட்களாக அதிகரிக்கப்பட்டு சனிக்கிழமையும்  நீதிமன்றம் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற தலைமை நீதிபதி நிர்வாகக்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்து சென்னை உயர்நீதிமன்றம்  தலைமை பதிவாளர் அறிவிப்பில் பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ள இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமை தவிர்த்து மற்ற அனைத்து சனிக்கிழமையும் சென்னை உயர்நீதிமன்றம் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி அனைத்து நீதிமன்றந்களும் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Step2: Place in ads Display sections

unicc