சென்னையில் இதுவரை 10 கோடிக்கு மேல் வசூல் செய்த திரைப்படங்கள் எவை தெரியுமா?!

சென்னையில் இதுவரை 10 கோடிக்கு மேல் வசூல் செய்த திரைப்படங்கள் எவை தெரியுமா?!

தமிழ் சினிமாவில் அண்மைக்காலமாக ஒரு படம் எத்தனை நாட்கள் ஓடுகிறது என்பதை விட ஒரு படம் எத்தனை கோடியோடு ஓடுகிறது எனப்துதான் தற்போதைய ரசிகர்களுக்கு முக்கியமாக தெரிகிறது.

அந்த வகையில், சென்னையில் இதுவரை வெளியான படங்களில் எத்தனை படங்கள் 10 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது என தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதில் சென்னையில் மட்டும் 10 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து சாதனையை  அறிமுகப்படுத்தி அதனை 5 முறை சாத்தியப்படுத்தி முதலிடத்தில் இருப்பது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தான். இவரது படங்களான எந்திரன், கபாலி, காலா, 2.ஓ, பேட்ட என ஐந்து படங்கள் வசூல் சாதனை படைத்துள்ளது.

அடுத்து விஜய் அஜித் இருவருமே இதுவரை 3 தடவை இச்சாதனையை செய்துள்ளனர். விஜயின் தெறி, மெர்சல், சர்கார் ஆகிய  படங்களும், அஜித்தின் விவேகம், விஸ்வாசம், நேர்கொண்ட பார்வை ஆகிய படங்களும் வசூல் செய்துள்ளன.

அதேபோல, பிரபாஸின் பாகுபலி 2 படமும் இச்சாதனையை செய்துள்ளது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.
Join our channel google news Youtube