வன்கொடுமை வழக்குகளில்விதிகளைப் பின்பற்ற வேண்டும்..!! தமிழக டிஜிபிக்கு உத்தரவு..!!

வன்கொடுமை வழக்குகளை டி.எஸ்.பி. அந்தஸ்துக்கு குறையாத அதிகாரிகள் விசாரிக்க வேண்டும்

By Fahad | Published: Mar 30 2020 04:55 PM

வன்கொடுமை வழக்குகளை டி.எஸ்.பி. அந்தஸ்துக்கு குறையாத அதிகாரிகள் விசாரிக்க வேண்டும் என்ற விதிகளைப் பின்பற்ற அறிவுறுத்துமாறு தமிழக டிஜிபிக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. இரண்டாயிரமாவது ஆண்டு பட்டுக்கோட்டை அருகே தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த இளம்பெண்ணைப் பாலியல் பாலத்காரம் செய்த வழக்கில் சுரேந்திரகுமார் என்பவருக்குத் தஞ்சாவூர் நீதிமன்றம் 7ஆண்டு சிறைத் தண்டனை விதித்தது. இதை எதிர்த்து சுரேந்திரகுமார் தாக்கல் செய்த மேல் முறையீட்டை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி முரளிதரன், வன்கொடுமை வழக்குகளை டி.எஸ்.பி., அந்தஸ்துக்குக் குறையாத அதிகாரி விசாரிக்க வேண்டும் என்று சட்டத்தில் உள்ளதைக் குறிப்பிட்டார். இந்த வழக்கைக் காவல் ஆய்வாளர் விசாரித்துள்ளதால் கீழமை நீதிமன்றம் வழங்கிய தண்டனை ரத்து செய்யப்படுவதாகத் தெரிவித்தார். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்  

More News From Tamilnadu police