இந்திய வரலாற்றை மாற்றுகிறது கீழடி

இந்திய வரலாற்றை மாற்றுகிறது கீழடி

தமிழர் நாகரிகம் குறைந்தது 2600 ஆண்டுகள் பழமையானது என்பது கீழடியில் நடத்தப்பட்ட  அகழாய்வின் மூலமாக தெரியவந்துள்ளது.

சிவகங்கை மாவட்டம் திருபுவனம் அருகே இருக்கும் கீழடி பகுதியில் தொல்லியல் துறையின் அகழ்வாய்வுகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.இந்த ஆய்வில் கிடைக்கும் பொருட்கள் உலக புகழ் பெற்ற ஆய்வு  மையங்களில் வைத்து ஆய்வு செய்யப்படுகின்றது.

இந்த நிலையில் தான் அமெரிக்காவை ​சேர்ந்த பீட்டா என்ற நிறுவனத்திற்கு,  கீழடி அகழ்வாராய்ச்சியில் கிடைத்த பொருட்கள், கார்பன் டேட்டிங் முறையில் சோதனை செய்யப்பட்டது.இதன் முடிவில் கீழடி  பகுதி சுமார் 2600 ஆண்டுகள் பழமையான நாகரீகத்தை கொண்டது என்பது தெரிய வந்துள்ளது.இந்த முடிவுளின்  மூலம்  தமிழகம்  2600 ஆண்டுகளுக்கு முன்பே மிக தொன்மையான பண்பாட்டை கொண்டது என்பது தெரியவந்துள்ளது . இதன் மூலம் தமிழர்கள்  2600 ஆண்டுகளுக்கு முன்பே  எழுத்தறிவு பெற்றவர்களாக இருந்துள்ளனர் என்பது நிரூபணம் ஆகியுள்ளது.

Join our channel google news Youtube