விண்ணில் பாய்ந்த சந்திரயான்-2!குடியரசுத் தலைவர் ,பிரதமர் வாழ்த்து

சந்திரயான்-2 விண்கலத்தை வெற்றிகரமாக விண்ணில் ஏவிய இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு,குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த்  மற்றும் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த்  வெளியிட்ட வாழ்த்து செய்தியில், இந்த நாள்  வரலாற்று முக்கியத்துவமான நாள். இந்த நாள் அனைத்து இந்தியர்களும் பெருமைப்பட வேண்டிய நாளாகும். விண்வெளி திட்டத்தில் இந்தியாவின் அடுத்தக்கட்ட வளர்ச்சிக்கு ஊக்கம் அளிக்கும் விதமாக பணியாற்றிய அனைத்து   விஞ்ஞானிகளுக்கும் நன்றி.

பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து செய்தியில், இந்திய நாட்டின் வரலாற்றில் இது ஒரு முக்கிய நிகழ்வு. சந்திரயான் விண்ணில் ஏவப்பட்டது இந்திய விஞ்ஞானிகளின் திறமையை உலகத்திற்கு வெளிப்படுத்துகிறது.இவர்களின் இந்தச் சாதனை இளைஞர்களை அறிவியல் துறைக்கு வருவதை ஈர்க்கும். இந்த விண்கலம் முற்றிலும் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்டது மிகப் பெரிய சிறப்பு என்று தெரிவித்துள்ளார்.