சந்திராயன் 2 விண்கலம் இனி கடக்க போகும் பாதை இதுதான்! எந்த நாளில் எங்கு பயணப்படும் விவரங்கள் உள்ளே…

சந்திராயன் 2 விண்கலம் இனி கடக்க போகும் பாதை இதுதான்! எந்த நாளில் எங்கு பயணப்படும் விவரங்கள் உள்ளே…

நிலவின் தென்பகுதிக்கு சென்று ஆராய உள்ள சந்திராயன் 2 விண்கலம் விண்ணிற்க்கு இன்று வெற்றிகரமாக ஏவப்பட்டது. சந்திராயன் 2 விண்கலம் முதலில் உந்து சக்திக்கு திரவ எரிபொருள் பயன்படுத்தப்பட்டது.

அடுத்ததாக திட எரிபொருளை வைத்து 170 கிமீ பயணம் செய்கிறது சந்திராயன் விண்கலம், அடுத்ததாக கிரையோஜெனிக் என்ற எரிபொருள் மூலமாக 176 கிமீ பயணம் செய்யப்படுகிறது. அடுத்ததாக 181 கிமீ பயணம் செய்து ராக்கெட்டும், சந்திராயன் 2 விண்கலமும் பிரிந்து விடுகின்றன.

இதில் பிரிந்த விண்கலம் பூமியை 23 நாட்கள் தொடர்ந்து பூமியை சுற்றி வருகிறது. அந்த 23 நாட்களும் எஞ்சின் இயக்கப்பட்டு, பூமியின் சுற்று வட்ட பாதையில் இருந்து விலகி விலகி சந்திரன் நீள்வட்ட பாதையில்  அடுத்த 7 நாட்களுக்கு அதாவது 30 வது நாள் நிலவின் சுற்றுப்பாதையில் சந்திராயன் 2 சென்றுவிடுகிறது.

நிலவின் சுற்று பாதையில் 13 நாட்கள் சுற்றி 43 வது நாள், விண்கலம் இரண்டு பக்கமாக பிரகிக்கப்படும். ஆர்பிட்டரும், லேண்டரும் பிரிக்கப்படும். பின்னர் லேண்டரில் இருந்து விக்ரம் லேண்டர் நிலவில் படிப்படியாக நிலவில் இறங்கி 48வது நாள் தரையிறக்க பட உள்ளது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.
Join our channel google news Youtube