இந்திய மக்களை நிம்மதி பெருமூச்சு அடைய வைத்த சந்திராயன் 2 சிறப்பு செய்தி!

இந்திய மக்களை நிம்மதி பெருமூச்சு அடைய வைத்த சந்திராயன் 2 சிறப்பு செய்தி!

நிலவின் தென் துருவத்தை ஆராய்ச்சி செய்ய சந்திரயான்-2 விண்கலம் இஸ்ரோவால் விண்ணிற்கு அனுப்பப்பட்டது. சந்திராயன் 2 விண்கலத்தில் இருக்கும் ஆர்பிட்டலில் இருந்து விக்ரம் என பெயரிடபட்ட லேண்டர் பகுதி மட்டும் பிரிந்து இன்று அதிகாலை 1.30 மணியாளவில் நிலவில் தரை இறங்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் கடைசி நேர சில சறுக்கல்கள் காரணமாக லேண்டரில் இருந்து சிக்னல் முழுவதுமாக துண்டிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதனால் இஸ்ரோ விஞ்ஞானிகள் மிகவும் வருத்தத்தில் இருந்தனர். மக்களும் வருத்தத்தில் இருந்தனர்.

அவர்களை சற்று நிம்மதி அடைய வைக்கும் அளவிற்கு தற்போது செய்தி வெளியாகியுள்ளது. அதன்படி லேண்டரை தரையிறக்கிய ஆர்பிட்டர் நிலவின் சுற்றுவட்டப்பாதையில் நிலவின் தரைப்பகுதியில் இருந்து 100 கிலோ மீட்டர் தூரத்தில் நிலவை ஒரு ஆண்டுக்கு சுற்றிவரும். அப்போது நிலவை பற்றிய தகவல்களை இஸ்ரோ தரை கட்டுப்பாட்டு அறைக்கு அனுப்பி வைக்கும் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இந்த தகவலால் இந்திய மக்கள் நிம்மதி பெருமூச்சு அடைந்துள்ளனர்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.
Join our channel google news Youtube