வீட்டு காவலில் முன்னாள் முதல்வர் மற்றும் அவரது மகன்! ஆளும் அரசுக்கு எதிரான பேரணி நடைபெறுமா?!

ஆந்திர மாநிலத்தில் ஆளும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் ஆட்சிக்கு எதிராக, பேரணி மற்றும்

By Fahad | Published: Apr 01 2020 02:55 PM

ஆந்திர மாநிலத்தில் ஆளும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் ஆட்சிக்கு எதிராக, பேரணி மற்றும் உண்ணாவிரதம் நடைபெறும் என தெலுங்குதேசம் கட்சி அழைப்பு விடுத்திருந்தது மேலும் தெலுங்குதேசம் கட்சி மீது கட்சியினர் மீது தொடர் தாக்குதலையும்,  அரசியல் வன்முறைகளையும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியினர் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாக கூறி அதன் பெயரில் இன்று பேரணி மற்றும் உண்ணாவிரதம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இன்று உண்ணாவிரதம் நடக்க இருந்த நிலையில், தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடுவும், அவரது மகன் நாரா லோகேஷ் ஆகியோர் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர். ஓய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக உண்ணாவிரத போராட்டம் நடத்த திட்டமிட்டிருந்த நிலையில் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனால் ஆந்திர அரசியலில் தற்போது மிகவும் பரபரப்பான சூழல் உருவாகியுள்ளது.

More News From YSR CONGRESS