தமிழகத்தில் 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு..!

தமிழகத்தில் 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்.

காற்றின் திசைவேகம் மாறுபாடு மற்றும் வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்தில் வட தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் 10 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

அந்த வகையில் சிவகங்கை, ராமநாதபுரம், திண்டுக்கல், தேனி, புதுக்கோட்டை, சென்னை, ஆகிய மாவட்டங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று கூறப்படுகிறது.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் சில பகுதிகளில் மிதமான மழை பெய்ய கூடும் என்றும் கூறப்படுகிறது.

மேலும் வடக்கு கிழக்கு வங்க கடல் பகுதிகளில் வருகின்ற 20ம் தேதி குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்புள்ளதால் தென்மேற்கு அரபிகடல் பகுதிகளில் மணிக்கு 45 கிலோ மீட்டர் வேகம் முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசும் என்பதால் மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.