சாக்லெட் பஞ்சம் உலகம் முழுவதும் விரைவில் வரும் !ஆய்வில் அதிர்ச்சி தகவல் ....

சாக்லேட் என்பது குழந்தைகள் முதல் பெரியவர் அனைவரும் விரும்பும் ஒன்றாகும்.ஆனால் 

By venu | Published: Jan 03, 2018 11:52 AM

சாக்லேட் என்பது குழந்தைகள் முதல் பெரியவர் அனைவரும் விரும்பும் ஒன்றாகும்.ஆனால்  தற்போது வெளியாகி உள்ள ஆய்வு ஓன்று திடுக்கிடும் தகவல் ஒன்றை தெரிவித்துள்ளது .அதாவது புவி வெப்பமயமாவதால், அடுத்த 30 ஆண்டுகளில் உலகளவில் சாக்லெட் தீர்ந்து போகும் அபாயம் உள்ளதாக அமெரிக்க ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது. உலகின் சாக்லெட் தேவையின் பாதியை நிவர்த்தி செய்யும் ஈக்வடார், கானா உள்ளிட்ட இடங்களில், அதிக மழையிருந்தால் மட்டுமே வளரக்கூடிய கோகோ மரங்கள், புவி வெப்பமயமாவதால் ஈரத்தன்மையை இழந்து பட்டுப் போகும் என அமெரிக்க தேசிய கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம்  கணித்துள்ளது. ஏற்கெனவே கடந்த ஆண்டு லண்டனைச் சேர்ந்த லார்ட் மேன் அக்ரி பிசினஸ் எனும் நிறுவனம் நடத்திய ஆய்வின்படி, இந்தியா உள்பட பல நாடுகளில் உலகளவில் சாக்லெட் நுகர்வு அதிகரித்திருப்பதால் அடுத்த சில ஆண்டுகளில் ஒருலட்சம் டன்கள் வரை சாக்லெட் பற்றாக்குறை ஏற்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் சாக்லெட்டுகளுக்கான கோகோ மரங்கள் பாதித்து, 30 ஆண்டுகளில் சாக்லெட் இல்லாமல் போகும் என்ற அமெரிக்காவின் தற்போதைய ஆய்வும், சாக்லெட் பிரியர்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.எனவே சாக்லேட் பயன்பாடு இல்லமால் அனைவராலும் வாழ முடியாது என்பதை நாம் அறிந்ததே ... source: dinasuvadu.com
Step2: Place in ads Display sections

unicc