மும்பையில் உள்ளூர் ரயிலை இயக்கிய பெண்மணியை பாராட்டிய மத்திய ரயில்வே.!

மும்பையில் ஊரடங்கு காரணமாக உள்ளூர் ரயில்கள் 84 நாட்களுக்கு மூடப்பட்ட பின்னர் ஜூன் 15 அன்று மீண்டும் இயக்கத் தொடங்கின. இந்நிலையில், ரயிலில் பயணிக்கும், பயணிகள் மற்றும் இயக்கும் ஓட்டுனர்கள் பாதுகாப்பாக இருக்க முகக்கவசம், சமூக இடைவெளியை பின்பற்றவேண்டும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்ட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து, மத்திய ரயில்வே தனது ட்விட்டரில் ஒரு புகைப்படத்தை பகிர்ந்துள்ளது. அதில், மும்பையில் உள்ளூர் ரயிலை இயக்கும் ஒரு பெண்மணி பெண் முககவசம் மற்றும் முகமூடி அணிந்து ரயிலை இயக்கும் புகைப்படத்தை பதிவிட்டு அதில்,உள்ளூர் ரயிலில் பயணிக்கும்போது அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுக்குமாறு பயணிகளிடம் முறையிடவும். பாதுகாப்பாக இருங்கள், எச்சரிக்கையாக இருங்கள் என மத்திய அரசு பதிவிட்டுள்ளது. .

இந்த பதிவிற்கு பலர் லைக்குகளையும் பல கருத்துகளையும் கொடுத்து வருகின்றனர். ட்வீட்டில் பலர் மகிழ்ச்சியடைந்தாலும், சிலர் உங்கள் ஊழியர்களை நீங்கள் கவனித்துக்கொள்வது நல்லது, அப்பெண்ணிற்கு கடமையில் இருக்கும்போது கையுறைகள் கொடுங்கள் என ரயில்வே துறைக்கு பரிந்துரைத்தனர்.

author avatar
murugan