மூத்த அரசு அதிகாரிகளே உஷார்.! கண்காணித்து கட்டாய ஓய்வு அளிக்கவுள்ள மத்திய அரசு.!?

மூத்த அரசு அதிகாரிகளே உஷார்.! கண்காணித்து கட்டாய ஓய்வு அளிக்கவுள்ள மத்திய அரசு.!?

30 வருட பணி அனுபவம் வைத்திருந்து 50 வயதிற்கு மேற்பட்டவர்கள், ஊழல் வழக்குகளில் சிக்கியவர்கள், பணிக்கு சரியான வருகை பதிவு இல்லாதவர்கள் ஆகியோர்களை கணக்கெடுத்து அவர்களுக்கு கட்டாய ஓய்வு அளிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாம்.

மத்திய அரசானது ஊழல் வழக்கில் சிக்கிய அதிகாரிகள் மற்றும் பணியில் சோம்பலுடன் இருக்கும் அதிகாரிகளை கட்டாய ஓய்வு அளிக்க உள்ளதாக தற்போது வெளியாகியுள்ளது. இதற்காக இரண்டு IAS அதிகாரிகள் கொண்ட ஒரு குழுவை மத்திய அரசு உருவாக்கியுள்ளதாம்.

அதாவது, 30 வருட பணி அனுபவம் வைத்திருந்து 50 வயதிற்கு மேற்பட்டவர்கள், ஊழல் வழக்குகளில் சிக்கியவர்கள், பணிக்கு சரியான வருகை பதிவு இல்லாதவர்கள் ஆகியோர்களை கணக்கெடுத்து அவர்களுக்கு கட்டாய ஓய்வு அளிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த அதிரடி நடவடிக்கைகளை மத்திய அரசுக்கு முன்பே சில மாநில அரசுகள் முன்வைத்து உள்ளனவாம். கடந்த ஆண்டு உத்தரபிரதேச அரசு, 600 அரசு அதிகாரிகளுக்கு கட்டாய விடுப்பு வழங்கியுள்ளதாம். அதேபோல் மத்திய நிதித்துறை ஆனது 27 உயரதிகாரிகளுக்கு கட்டாய ஓய்வு வழங்கியுள்ளது.

டெல்லி, ஹரியானா, உத்தர பிரதேசம், மகாராஷ்டிரா, திரிபுரா ஆகிய மாநில அரசுகளும் இந்த அதிரடி நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மத்திய ஊழல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் மற்றும் சிறப்பு கண்காணிப்பு கமிட்டியானது ஒவ்வொரு துறையிலும் கட்டாய ஓய்வு அளிப்பதற்கு உரிய அதிகாரிகளை கண்காணித்து வருகின்றனராம். இதற்கான தனி சிறப்பு குழு ஏற்கனவே டெல்லியில் உருவாக்கப்பட்டு விட்டதாம். மேலும், அங்கு ஏற்கனவே சில அதிகாரிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு கட்டாய ஓய்வு வழங்கும் அதிரடி நடவடிக்கை மேற்கொள்ள தொடங்கப்பட்டுவிட்டதாம்.

Latest Posts

போக்குவரத்துக்கு விதி மீறல்கள் - வளைகுடா அரசு அறிவித்துள்ள புதிய அபராதம்!
சீன அதிபரை விமர்சித்த கோடீஸ்வரருக்கு 18 ஆண்டுகள் சிறைத்தண்டனை.!
கொரோனா அதிகரிப்பை அடுத்து ஜெய்ப்பூர் மற்றும் ராய்பூரில் புதிய கட்டுப்பாடுகள்!
டெல்லியில் 13 நாட்கள் கழித்து லேசான மழைக்கு வாய்ப்பு - இந்திய வானிலை ஆய்வு மையம் 
அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன் வெற்றிபெற்றால் ,சீனாவிற்கு கிடைத்த வெற்றியாகும் - டொனால்ட் டிரம்ப் 
3 ஆம் கட்ட கொரோனா தடுப்பூசி பரிசோதனை ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் தொடக்கம்!
ரோஹித் சர்மா கேப்டன்ஷிப் கீழ் விளையாடுவது மகிழ்ச்சி.... பும்ரா....!
மாநிலங்களவை 8 எம்.பி.க்கள் நடத்தி வந்த தர்ணா போராட்டம் வாபஸ்.!
8 எம்.பி. க்களின் இடைநீக்கம் ரத்து செய்யப்படும் வரை மாநிலங்களவை புறக்கணிப்பு - குலாம் நபி ஆசாத்
ரூ.70.55 கோடி மதிப்பிலான 220 புதிய திட்டப் பணிகளுக்கு முதலமைச்சர் பழனிசாமி அடிக்கல்.!