தேசத்தின் அமைதியின் மீது மத்திய அரசு கைவைத்துள்ளது – மக்கள் நீதி மய்யம் அறிக்கை

  • குடியுரிமை சட்ட திருத்த  மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்தியாவின் பல மாநிலங்களில் போராட்டம் வெடித்து வருகின்றது. 
  • தேசத்தின் அமைதியின் மீது மத்திய அரசு கைவைத்துள்ளது என்று மக்கள் நீதி மய்யம் தெரிவித்துள்ளது. 

மத்திய அரசு நாடாளுமன்றங்களின் இரு அவைகளான மக்களவை மற்றும் மாநிலங்கவை என இரு அவைகளிலும் குடியுரிமை சட்ட திருத்த மசோதா மசோதா நிறைவேற்றம் செய்யப்பட்டது.குடியரசு தலைவரும் இந்த மசோதாவிற்கு ஒப்புதல் அளித்துவிட்டார்.

ஆனால் இந்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்தியாவின் பல மாநிலங்களில் போராட்டம் வெடித்து வருகின்றது. இதனால் அங்கு அசாதாரண சூழ்நிலைகள் நிலவி வருகின்றது.இ

இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது .அந்த அறிக்கையில், மத்திய அரசு தனக்கிருக்கும் பெரும்பான்மை பலத்தை வைத்து குடியுரிமை திருத்த சட்டத்தை நிறைவேற்றியுள்ளது.அரசியல் சாசனத்திற்கு எதிரான ஒரு சட்டத்திருத்தத்தை கொண்டுவந்து தேசத்தின் அமைதியின் மீது மத்திய அரசு கைவைத்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.