மத்திய பட்ஜெட் உரை 160 நிமிடங்கள்,தமிழக பட்ஜெட் 196 நிமிடங்கள்-நீண்ட பட்ஜெட்டை தாக்கல் செய்த பன்னீர் செல்வம்

துணை முதல்வரும் நிதியமைச்சருமான ஓ. பன்னீர்செல்வம்  இன்று தாக்கல் செய்த பட்ஜெட்டை  196 நிமிடங்கள் உரையாற்றியுள்ளார்.  

இன்று  2020 – 2021-ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை  தமிழக சட்டசபையில்  துணை முதல்வரும் நிதியமைச்சருமான ஓ. பன்னீர்செல்வம்  தாக்கல் செய்தார்.சரியாக இன்று காலை 10 மணிக்கு தமிழக பட்ஜெட்டை தாக்கல் செய்தார் பன்னீர் செல்வம்.இந்த பட்ஜெட்டில் பல்வேறு  துறைகளுக்கு ஒதுக்கப்படும் நிதி உள்ளிட்ட அறிவிப்புகளை அறிவித்தார்.பன்னீர் செல்வம் 10-வது முறையாக இன்று பட்ஜெட்டை தாக்கல் செய்தார். பன்னீர் செல்வம் இன்று தாக்கல் செய்த பட்ஜெட்டை சுமார் 196 நிமிடங்கள் தாக்கல் செய்துள்ளார்.

கடந்த பிப்ரவரி 1-ஆம் தேதி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சுமார் 160 நிமிடங்கள் பட்ஜெட்டை தாக்கல் செய்த நிலையில் தற்போது பன்னீர்செல்வம் 196 நிமிடங்கள் தாக்கல் செய்துள்ளார்.