ஸ்ரீ தேவியின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்க ஆசைப்படும் பிரபல முன்னணி நடிகை!

நடிகை தமன்னா தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. இவர் தமிழில் கேடி என்ற படத்தில்

By leena | Published: Oct 11, 2019 08:40 AM

நடிகை தமன்னா தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. இவர் தமிழில் கேடி என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னடம் போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் தற்போது பெட்ரோமாக்ஸ் என்ற திரைப்படம் வெளியாகவுள்ளது. இதனையடுத்து இவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில், 'கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் மட்டும்தான் நடிக்க வேண்டும் என்று நினைக்கவில்லை. அப்படி ஒரு வட்டத்தில் சிக்க மாட்டேன். எல்லா விதமான படங்களிலும் நடிக்க தான் விருப்பம். இப்பொது வாழ்க்கை வரலாறு படத்துல நடிக்க விருப்பம். அதிலும் ஸ்ரீ தேவியின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் உடனே ஒப்புக் கொள்வேன்.' எனக் கூறியுள்ளார்.
Step2: Place in ads Display sections

unicc