காதலியை கரம் பிடித்த பிரபல இயக்குனர்!

பிரபல இயக்குனராக வலம் வரும் இயக்குனர் ஆனந்த் சங்கர் ஏ.ஆர்.முருகதாஸிடம் உதவி இயக்குனராக பணி புரிந்து, நடிகர் விக்ரம் பிரபுவின் அரிமா நம்பி படத்தில் இயக்குனராக அறிமுகமானார்.

இந்நிலையில், இயக்குனர் ஆனந்த்சங்கர், திவ்யா ஜீவானந்தம் என்ற பெண்ணை காதலித்துள்ளார். இந்நிலையில், இவர்கள் இருவருக்கும் கடந்த நவம்பர் மாதம் நிச்சயதார்த்தம் நடைபெற்றதாக தனது ட்வீட்டர் பக்கத்தில் புகைப்படத்தை வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில், இவர்கள் இருவருக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த திருமண விழாவில் பல திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டுள்ளனர்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.